55 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் நாடு பூராகவுமுள்ள ஒவ்வொரு தனியான வங்கித் தேவையினையும் சௌகரியமாகவும் சுலபமாகவும் கவனிக்கக்கூடியதாயிருக்கும்.
"இவற்றையும்" நீங்கள் பெறுவீர்கள்
உங்கள் புகைப்படத்துடனும்/இல்லாமலும் ஒரு விசேட அடையாள அட்டை.
செலிங்கோ துரித பாதுகாப்பு(Ceylinco Swift Care) க்கு இலவச அங்கத்துவம்.
24 மணித்தியாலம் சுகாதார சேவை.
அவர்களால் அளிக்கப்படும் மேலும் சில சேவைகள்.
- சுழற்சி முறையில் மருத்துவர்கள் சேவை
- அம்புலன்ஸ் சேவை
- வீட்டுத்தாதி சேவை
- நடமாடும் புலன்விசாரணை சேவை
- PD சேவை
வரையறுக்கப்பட்ட செலிங்கோ துரித பாதுகாப்பு பிரைவேட் லிமிடெட் (Ceylinco Swift Care (PVT) Ltd.) விலைப்பட்டியலில் குறிக்கப்பட்டுள்ள ஒரு கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் மேற்குறித்த சேவைகளை நீங்கள் பெறலாம்.
மேலதிக விபரங்களுக்கு செலிங்கோ துரித பாதுகாப்பு நிறுவனத்தின் 28670000, 5363363 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
சேவைகள் கிடைக்கும் இடங்கள்:
கொழும்பு 1-15, பேலியகொட, ராஜகிரிய, பத்தரமுல்ல, பெலவத்த, எதுல் கோட்டே, பிட்டகோட்டே, நுகேகொட, மிரிஹான, தெஹிவளை, மஹரகம, பன்னிபிட்டிய, பெபிலியான, கல்கிசை, களனி, மாலபே, அதுறுகிரிய, வத்தளை, இரத்மலான.
ஒருவரை நியிமிக்கும் வசதி உண்டு (நடைமுறைக் கணக்குகள் தவிர்ந்த)
உங்கள் வயது 60 அல்லது அதற்கு மேலாயின்
உங்கள் பிறந்த நாளுக்கு முன்னர், தொடர்ச்சியாக 12 மாதங்கள் நடைமுறைக் கணக்கில் அல்லது சாதாரன சேமிப்பு கணக்கில்" ரூபா.20,000/= பேணிவந்திருப்பின், பிறந்த நாளன்று பெறுமதிவாய்ந்த கைக்கடிகாரமொன்றினைப் பரிசாகப் பெறுவீர்கள்.
(தகுதிப் பரிசின் கீழ் இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு மாத்திரம்)
கூட்டுக் கணக்குகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு கூட்டு அங்கத்தவர்களும்; கைக்கடிகாரம் பெறுவதற்குக் குறைந்தபட்ச மீதியைப் பேணவேண்டும்.
உங்கள் வயது 70 அல்லது அதற்கு மேலாயின்
நடைமுறைக் கணக்கில் அல்லது சாதாரன சேமிப்பு கணக்கில் ரூபா.20,000/= வினை 12 மாதங்கள் தொடர்ச்சியாகப் பேணி வந்திருப்பின்: உங்கள் மருத்துவ செலவுகள் ஈடுசெய்யப்படும்.
மருத்துவச் செலவுகள் (மருந்துக்கான பற்றுச்சீட்டு, மருத்துவரின் ஆலோசனைக் கட்டண ரசீது, எக்ஸ் கதிர் கட்டணம், மருத்துவ விசாரணை போன்ற செலவுகள் உட்பட) கீழே குறிப்பிடப்பட்டுள்ள உச்சவரம்புக்குள் இருப்பின் ஈடுசெய்யப்படும்.
ஸெப்டியூஅஜினேரியனுக்காக (70 -79 வயதிற்குட்பட்டவர்) ஈடு செய்யப்படும் மருத்துவச் செலவு ரூபா.5,000/=.
ஓக்டோஜெனேரியனுக்காக (80 -89 வயதிற்குட்பட்டவர்) ஈடு செய்யப்படும் மருத்துவச் செலவு ரூபா.10,000/=.
நொனஜேரியனுக்காக (90 -99 வயதிற்குட்பட்டவர்) ஈடு செய்யப்படும் மருத்துவச் செலவு ரூபா.15,000/=.
சென்டினேரியனுக்காக (100 வயதிற்கு மேல்) ஈடு செய்யப்படும் மருத்துவச் செலவு ரூபா.20,000/=.
மேற்குறிப்பிட்ட வரையறைகள் முதல் உரிமை கோரலிலிருந்து ஒரு வருட காலத்துக்கு மட்டுமே செல்லுபடியானதாகும்.
வாசிப்பு உபகரணங்கள்
றீடர்ஸ் டஜெஸ்ட் (Readers Digest) சஞ்சிகைக்கு ஒரு வருட சந்தாப் பணம் அல்லது ஏதேனும் உள்ளுர் செய்தித்தாள் / செய்திச் சஞ்சிகைக்கான ஒரு வருட செலவை ஈடுசெய்ய முடியும். இந்த நிகழ்வும் ஒரு தடவை மட்டுமே இடம்பெறும்.
உங்களுக்கு ஓர் நிலையான வைப்பு இருந்தால்
உங்கள் நிலையான வைப்புக்கு 1% வட்டி கூடுதலாக வழங்கப்படும். (கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் 55 வயதினைத் தாண்டியிருந்தால் மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ள கூடுதல் வட்டியினைப் பெறுவதற்கு உரித்துடையவர்களாவர்)
நீங்கள் நிலையான வைப்பில் ஒரு வருடகாலத்துக்கு மேலாக ரூபா.100,000/= அல்லது அதற்கு மேல் பேணுபவராயின்,
20 வகையான நோய்களுக்கு ஆபத்து காப்புறுதிப் பாதுகாப்பு இலவசம். (கணக்கு வைத்திருப்பவர் 55-60 வயதிற்குட்பட்டவராயிருக்க வேண்டும்).
கடன் அட்டையை இலவசமாகப் பெறலாம்.
விசேட கடன் வசதிகள். (நிபந்தனைகளுடன் கூடியது).
மேலதிக விபரங்களுக்கு அருகாமையிலுள்ள செலான் வங்கிக் கிளையை நாடுங்கள். அல்லது 2456937 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். |